Friday, December 27, 2013

                                      2014


கண்டங்கள் கடந்து 
ஒன்றாகக்  கூடி
2014 ஐ கொண்டாடுவோம் 

புயலோ ,பூகம்பமோ 
எரிமலையோ ,ஆழிப்பேரலையோ  
அச்சுறுத்தாமல் இருக்க 
இறைவனை வேண்டுவோம் 

பேராபத்து விளைவிக்கும் 
போர் ஆயுதங்களை 
கடலில் வீசியெறிந்து நாம் 
கைகோர்த்துக்கொள்வோம் 

மதம்,மொழி பல இருப்பினும் 
மனித இனம் ஒன்று என வாழ்வோம் 

அனைத்து மொழியிலும் 
வறுமையைக் குறிக்கும் 
சொல்லை நீக்குவோம் 

அனைவரும் ஒன்றாய் 
HAPPY NEW YEAR
வாழ்த்துச் சொல்லி 
அன்பைப் பரிமாறுவோம் .
  




            

                     

Sunday, September 29, 2013

 உதிர்ந்த சொற்கள் 





உணவைக் குறையுங்கள்
கொழுப்பு குறையும் என்ற மருத்துவரிடம் 
ஒரு காலத்தில் உணவின்றி தவித்தவன் என்ற
 ஒரு சொல் 

மேடைப் பேச்சின் கைத்தட்டலிடையே நான் 
பணிவு காட்டாமல் உதிர்த்த 
ஒரு சொல் 

நேர்முகத்தேர்வில் தேர்வாகும் வேளையில் 
பதில் சொல்ல   வேண்டிய நான் கேள்வி கேட்ட
ஒரு சொல் 

விருந்துண்ட வேளையில் 
விருந்தளிப்போனிடம் 
உண்மையைச்  சொன்ன 
ஒரு சொல் 

விரும்பியதெல்லாம் வாங்கிக்கொடுத்து 
குழந்தைகள் முகம் வாடிப்போக வெளிப்பட்ட 
ஒரு சொல் 

உறவுகள்   உயிரென மதித்திட 
உணர்ச்சிவயப்பட்டு காயம் பட 
உரைத்திட்ட 
ஒரு சொல் 

மூளையில் உதித்த சொற்களை 
அப்படியே உதிர்த்து
சாயம் உதிர்ந்த  சுவரென சொற்கள்
தவிர்க்கமுடிவதில்லை . 
      

Friday, September 13, 2013

           விவாகரத்து 



விவாகரத்து  கோர்ட்டில் 
விளையாடுகின்றனர் 
விபரம் அறியாத 
குழந்தைகள் .

Friday, July 26, 2013

     எப்படி சொல்வேன் 


இரகசியமாய் உன் ஞாபகங்களை சேமிக்கிறேன் 
இரவினில் கொஞ்சம் அழுகிறேன் 

சபைகளில் தன்நிலை  மறக்கிறேன் 
சங்கீதம் கூட கேட்பதை தவிர்க்கிறேன் 

காதுக்குள் உன் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது 
கண்களை மூடி உன் முகம் பார்க்கமுடிகிறது 

என் சுவாசத்தில் ஏதோ தடுமாற்றம் 
இதயம் இடப்புறமா ,வலப்புறமா குழப்பம் 

கடந்த கால நினைவுகள்   நிகழ்கால நிகழ்வுகளை  அழித்துப் போகிறது 
காதலை வெளிப்படுத்தாத நான் ஊமையானால் என்ன 

காற்றலையை உதவிக்கு அழைக்கிறேன்  அது 
செல்லுமிடமெல்லாம் சொல்லிவிட்டு சென்றால் என்னாவது 

காத்திருந்தே கரைகின்றன
எனது பொழுதுகள் .

Friday, July 19, 2013

               வாலி ஒரு கவி அவதாரம் 



அக்காலக் கவிஞர்கள் 
இக்காலக் கவிஞர்கள் என 
எக்காலக் கவிஞர்களோடும்  உங்கள் 
இனிய பாடலால் உலவுவதால்  
முக்காலமும் பேசும் கவிஞரானீர் 

பூக்களின் அழகில்  ஏது வேறுபாடு 
கவிஞர்களுக்குள்   எதற்கு ஒப்பீடு
கம்பரும் ஒன்றுதான்,வாலியும் ஒன்றுதான் 

சினிமாவில் மட்டுமே நடித்து
நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத மனிதர் 

சேர்க்கும் பொருளனைத்தையும் 
செலவழித்தே தீர்ப்பதில் 
நீங்களும் கண்ணதாசனும் மட்டுமே 
போட்டியாளர்கள் 

பொருள் சேர்க்காவிட்டாலும்
பத்மஸ்ரீயும் கலைமாமணியும் 
புகழ் சேர்த்தன  உங்கள் வாழ்வில் 

பதினைந்தாயிரத்திற்கு மேல் 
பாடல்கள் படைத்த நீங்களும் 
கவிஅவதாரமே  

அவதார புருஷன் எழுதி 
நாத்திகரையும் ஆத்திகராய் 
மாற்றி வைத்த பெருமையெல்லாம் 
உங்களைச் சேரும் 

"வேஷம் கலைக்கவும் 
ஓய்வு எடுக்கவும் 
வேளை வந்ததம்மா "
இது உங்கள் வார்த்தை
ஓய்வில் இருக்கிறீர்கள் 

மறு ஜென்மத்திலும்
கவிஞனாய் மலருங்கள்.

                                                                          

        
      

Wednesday, June 12, 2013

  எனக்குன்னு ஒருவன் 


புது வளையல் வேண்டுமென்று 
உடையாத ரப்பர் வளையல் 
உடைச்ச கதை 

ஓலைக்குடிசையில 
ஒரு மழை பெய்தாலே 
ஒழுகாத பகுதி தேடி 
உட்கார்ந்து தூங்கியகதை 

பால் வித்த காசுல படிச்சு 
ஒரு வேளை  தேநீரும் 
ஊறுகாயில் ரசம் சோறும் 
உயிர் வளர்த்த கதை 

கல்லூரி காலத்தில் 
கலர் கலரா உடை அணியாம 
மூன்றே தாவணியில் 
மூன்றாண்டு முடிச்ச கதை 

வறுமையில வாழ்ந்ததில 
வாக்கப்பட முடியாதுன்னு 
பெத்தவங்க போதுமுன்னு 
நினைச்ச கதை 

அடிமனசில் ஒரு ஆசை 
அரசாங்க உத்தியோகம் 
அத்தனையும் சொல்லியழ 
அன்பான கணவன் 

இதெல்லாம் கிடைக்குமா 
இப்படியே முடிந்துபோகுமா 
என் வாழ்க்கை .

Friday, April 12, 2013

       வெறுமை 


மனம் வெற்றுத்தாளாய் படபடக்கிறது 
எண்ணங்களை எழுத்தில் வடிக்க இயலாமையால் 
ஏளனம் செய்கிறது என் பேனா 
வெறுமையில் தோய்ந்து போன மனதில் 
வாழ்க்கை மெல்ல ஊர்ந்து செல்கிறது 
வலி தாங்கவும் ,மகிழ்ச்சியில் திளைக்கவும் மனமின்றி 
கரை தெரியாத ஆழ் கடலில் மிதக்கிறேன் 
வெளிச்சம் ,இருள் இரண்டுமற்ற நிலையை நாடுகிறது 
உள்ளத்தில் உள்ளபடி சொன்னால் மிஞ்சுவது ஏளனம் 
யாரிடமும் குறையில்லை 
மதி மயங்கி நிற்கிறேன் 
விதி வழி செல்கிறேன் .

Sunday, March 24, 2013

              அலைகள்


(காதலனைக் கைப்பிடிக்க முடியாத ஒரு  இந்தியப் பெண்ணின் ஏக்கத்தின் வெளிப்பாடு )


நேற்று வரை வந்த கடிதங்களை தணலில் இட்டாச்சு 
நாளை முதல் வேறு முகம் நான் அணியும் நாள் வந்தாச்சு 

கடற்கரை வசனங்கள் கடற்காற்றில் கரைந்துபோனது
கால் தடங்களை கடல் அலைகள் அழித்துப்போனது 

சேர்த்து வச்ச ஆசையெல்லாம் செல்லாக்காசு 
சேர்ந்துவாழ நினச்சதெல்லாம் செல்லரிச்சுபோச்சு

ஆட்டோகிராப்பின் பக்கத்தை அடையாளம் தெரியாம மாத்திட்டன் 
ஆறுதல் சொல்லிகிட்டேன் அடிமனசில் உள்ளத அப்படியே வச்சிருக்கேன்

சில பெண்களுக்கு இரண்டு வாழ்க்கை 
தான் நினச்சது ஒன்னு அப்பன் விதிச்சதொன்னு

அப்படி இப்படின்னு யோசிச்சு பார்த்ததில 
அகலிகையாய் வாழனும், இல்ல அவன் நினைவோட சாகனும்  


Friday, February 22, 2013


மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட மனக்குமுரலின் வெளிப்பாடு


அக்கினி குஞ்சினைக் கண்டு 
அஞ்சி நடுங்கிய கூட்டம் 

கொன்று குவித்தது 
கொடுங்கோலன் தலைமையில் 
கோழை எனப்பெயர் பெற்றது 

புலிகளின் வீர மரணம் மரியாதைக்குறியது 
பாலகனின் கொலை பரிதாபத்திர்க்குறியது

பட்டங்கள் பல பெற்று வாழ்ந்திருப்பான்
பாரினில் புகழ் பல வென்றிருப்பான்

என்னென்ன கனவுகள் கண்டிருப்பான்
எப்படியும் தமிழீழம் வென்றிருப்பான்

பூவை பொசிக்கிவிட்டு ஓலமிடுது அக்கூட்டம்
பூமியெங்கும் புறப்படும் தமிழ் போராளிகளைக் கண்டு
பயந்தோடும் அச்சிறு சிங்கள ராணுவ கூட்டம் .









Saturday, February 16, 2013

              எங்கே சென்றாள்?


ஆடையால் அழகை மூட 
ஆஹா அழகு கூட 
என்ன செய்வது எனத் தெரியாமல் அவளும் 
என்ன செய்வாள் என வியப்பதுமாய் நானும் 
நகர்ந்தன சில நிமிடங்கள் 

எனக்கு பிடிக்குமென அவள் உடையணிந்துவர 
அவளுக்கு பிடிக்குமென நான் உடையணிந்துவர 
நாங்கள் ரசித்தது உள்ளங்கள் என்ற உண்மை உணரவில்லை 

ஒரு புள்ளியில் பேச்சு திசைமாறுகையில் 
சட்டென அவள் இதழ்கள் மூட 
மூட வேண்டியது இதழ்கள் அல்ல இமைகள் என்றேன் 

இரு கரம் நீட்டி வாவென அழைக்க 
இத்தொடு நிற்காது இந்த விளையாட்டு என 
வெட்கத்தால் விலகிக்கொண்டவள் 

கன்னம் வருடும் கேசத்தின் மேல் கோபம் எனக்கு 
நான் முத்தமிடும் பகுதி ,எச்சரிக்கிறேன் விலகிச்செல்

யுகங்கள் கடந்த நம் நேசம் எந்த
முகங்கள் அறியும்

குறுகிய காலத்தில் நடந்த
நெடும் பயணம் நம் காதல்

விதைகளை வீசிவிட்டு
விதி வழி செல்வதெங்கே?

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...