Friday, July 19, 2013

               வாலி ஒரு கவி அவதாரம் 



அக்காலக் கவிஞர்கள் 
இக்காலக் கவிஞர்கள் என 
எக்காலக் கவிஞர்களோடும்  உங்கள் 
இனிய பாடலால் உலவுவதால்  
முக்காலமும் பேசும் கவிஞரானீர் 

பூக்களின் அழகில்  ஏது வேறுபாடு 
கவிஞர்களுக்குள்   எதற்கு ஒப்பீடு
கம்பரும் ஒன்றுதான்,வாலியும் ஒன்றுதான் 

சினிமாவில் மட்டுமே நடித்து
நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத மனிதர் 

சேர்க்கும் பொருளனைத்தையும் 
செலவழித்தே தீர்ப்பதில் 
நீங்களும் கண்ணதாசனும் மட்டுமே 
போட்டியாளர்கள் 

பொருள் சேர்க்காவிட்டாலும்
பத்மஸ்ரீயும் கலைமாமணியும் 
புகழ் சேர்த்தன  உங்கள் வாழ்வில் 

பதினைந்தாயிரத்திற்கு மேல் 
பாடல்கள் படைத்த நீங்களும் 
கவிஅவதாரமே  

அவதார புருஷன் எழுதி 
நாத்திகரையும் ஆத்திகராய் 
மாற்றி வைத்த பெருமையெல்லாம் 
உங்களைச் சேரும் 

"வேஷம் கலைக்கவும் 
ஓய்வு எடுக்கவும் 
வேளை வந்ததம்மா "
இது உங்கள் வார்த்தை
ஓய்வில் இருக்கிறீர்கள் 

மறு ஜென்மத்திலும்
கவிஞனாய் மலருங்கள்.

                                                                          

        
      

1 comment:

  1. "மறு ஜென்மத்திலும்
    கவிஞனாய் மலருங்கள்"- நல்லா எழுதியிருக்கீங்க சார் . அருமை இருக்கு .

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...