Friday, July 27, 2012

கவிதை




குழந்தையின்
கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது
அழகான ஓவியம்

அம்மாவின் அழகான
கோலத்தில்
மறைந்திருக்கிறது
 எரும்புத்தீனி

காதலியின் கண்களில்
கண்டுகொள்ள இயலாத
கள்ளத்தனம்

அலங்கரிக்கப்போவது எந்த
அழகியின் கூந்தல் எனகு
கவலைகொள்ளும்
ஒற்றைரோஜா


மலையைத் தழுவும் மேகம்
பெண்ணின் அழகை
மூடச்சொன்ன ரகசியம்

கடவுளுக்கு காணிக்கை
ஊமை ஒப்பந்தங்கள்

தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்     
இவற்றில் சிக்கித்தவிக்கிறது
எனக்கான  கவிதை .  

2 comments:

  1. அன்புள்ள கவிஞரே உங்களின் இந்த இனிமையான கவிதை உண்மையில் ஒவ்வொரு வரியும் மகிழ்ந்து அனுபவித்து ரசிக்கும் வகையில் இருந்தது.
    ஒரு ரசிகன் என்ற வகையில் இதனை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. கடவுளுக்கு காணிக்கை ஊமை ஒப்பந்தங்கள் என்ற வரிகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
    சூரியனும் சந்திரனும் விளையாடும் யாரும் அறியாத கண்ணாமூச்சி என்ற வைர வரிகள் நம் அன்றாட வாழ்கையின் பிரதிபலிப்பாகும்.

    ஒட்டு மொத்தமாக இந்த கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

    வாழ்க உமது தொண்டு. வளரட்டும் உமது புகழ்.

    அன்புடன்

    செந்தில்குமார்,

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...