கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது
அழகான ஓவியம்
அம்மாவின் அழகான
கோலத்தில்
மறைந்திருக்கிறது
எரும்புத்தீனி
காதலியின் கண்களில்
கண்டுகொள்ள இயலாத
கள்ளத்தனம்
அலங்கரிக்கப்போவது எந்த
அழகியின் கூந்தல் எனகு
கவலைகொள்ளும்
ஒற்றைரோஜா
மலையைத் தழுவும் மேகம்
பெண்ணின் அழகை
மூடச்சொன்ன ரகசியம்
கடவுளுக்கு காணிக்கை
ஊமை ஒப்பந்தங்கள்
தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்
தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்
இவற்றில் சிக்கித்தவிக்கிறது
எனக்கான கவிதை .
எனக்கான கவிதை .
very good...keep it up
ReplyDeleteஅன்புள்ள கவிஞரே உங்களின் இந்த இனிமையான கவிதை உண்மையில் ஒவ்வொரு வரியும் மகிழ்ந்து அனுபவித்து ரசிக்கும் வகையில் இருந்தது.
ReplyDeleteஒரு ரசிகன் என்ற வகையில் இதனை எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. கடவுளுக்கு காணிக்கை ஊமை ஒப்பந்தங்கள் என்ற வரிகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
சூரியனும் சந்திரனும் விளையாடும் யாரும் அறியாத கண்ணாமூச்சி என்ற வைர வரிகள் நம் அன்றாட வாழ்கையின் பிரதிபலிப்பாகும்.
ஒட்டு மொத்தமாக இந்த கவிதையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
வாழ்க உமது தொண்டு. வளரட்டும் உமது புகழ்.
அன்புடன்
செந்தில்குமார்,