Saturday, August 18, 2012

காதலியைக்  கரம் பிடித்தேன்




இந்த பாலைவனம்
பூத்தது உன் நினைவால்

இந்த
துறவி
துறந்தது துறவு
அணிந்தது உன்
அன்பு

என்
விழித்திரையில்
எப்போதும் நீ
விழித்திருக்கிறாய்

ஒரு விமர்சகனை
நினைத்து   அல்லல் படும்
எழுத்தாளன் போல்
உன்னால்  கலங்கிப்போகிறேன்

காதலிக்கும் போது
திருமணம் வேண்டிநின்றோம்
திருமணத்திற்குப்பின்
காதலை யாசித்தோம்

திருமணத்திற்கு   முன்னும் பின்னும்
அதிகம் கோபித்துகொன்டவள்  நீ தான்

நாம் வசதியில் வாழ்ந்தவர்கள் அல்ல
வறுமையிலிருந்து மீண்டவர்கள்

என்னோடு சண்டையிட்டால்
மகிழ்வேன்
உன்னோடு சண்டையிட்டு கொள்கிறாய்

எனக்காக
அதிகம் இழந்தவள் நீ
உனக்காக
எல்லாம் இழந்தவன் நான் .

2 comments:

  1. இனிய கவிஞரே,

    நீவிர் உமது சொந்த வாழ்க்கையை இந்த கவிதையில் அற்புதமாக செதுக்கி உள்ளீர்கள் என்பது உங்களின் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்குமா?
    சிற்சில எழுத்து பிழைகள் இருப்பது கணினியில் உள்ளீடு செய்வதில் உள்ள சிரமத்தினால்தான் என்பது என்போல் உள்ள உமது ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை. மிகவும் அற்புதமான உமது பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.

    அன்புடன்
    க.செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...