எனக்குன்னு ஒருவன்
உடையாத ரப்பர் வளையல்
உடைச்ச கதை
ஓலைக்குடிசையில
ஒரு மழை பெய்தாலே
ஒழுகாத பகுதி தேடி
உட்கார்ந்து தூங்கியகதை
பால் வித்த காசுல படிச்சு
ஒரு வேளை தேநீரும்
ஊறுகாயில் ரசம் சோறும்
உயிர் வளர்த்த கதை
கல்லூரி காலத்தில்
கலர் கலரா உடை அணியாம
மூன்றே தாவணியில்
மூன்றாண்டு முடிச்ச கதை
வறுமையில வாழ்ந்ததில
வாக்கப்பட முடியாதுன்னு
பெத்தவங்க போதுமுன்னு
நினைச்ச கதை
அடிமனசில் ஒரு ஆசை
அரசாங்க உத்தியோகம்
அத்தனையும் சொல்லியழ
அன்பான கணவன்
இதெல்லாம் கிடைக்குமா
இப்படியே முடிந்துபோகுமா
என் வாழ்க்கை .
மனதைக் கரைக்கும் கவிதை. நன்றி.
ReplyDeleteஅருமை அருமை...தொடர்ந்து எழுதுக நண்பரே...
ReplyDelete