Saturday, February 16, 2013

              எங்கே சென்றாள்?


ஆடையால் அழகை மூட 
ஆஹா அழகு கூட 
என்ன செய்வது எனத் தெரியாமல் அவளும் 
என்ன செய்வாள் என வியப்பதுமாய் நானும் 
நகர்ந்தன சில நிமிடங்கள் 

எனக்கு பிடிக்குமென அவள் உடையணிந்துவர 
அவளுக்கு பிடிக்குமென நான் உடையணிந்துவர 
நாங்கள் ரசித்தது உள்ளங்கள் என்ற உண்மை உணரவில்லை 

ஒரு புள்ளியில் பேச்சு திசைமாறுகையில் 
சட்டென அவள் இதழ்கள் மூட 
மூட வேண்டியது இதழ்கள் அல்ல இமைகள் என்றேன் 

இரு கரம் நீட்டி வாவென அழைக்க 
இத்தொடு நிற்காது இந்த விளையாட்டு என 
வெட்கத்தால் விலகிக்கொண்டவள் 

கன்னம் வருடும் கேசத்தின் மேல் கோபம் எனக்கு 
நான் முத்தமிடும் பகுதி ,எச்சரிக்கிறேன் விலகிச்செல்

யுகங்கள் கடந்த நம் நேசம் எந்த
முகங்கள் அறியும்

குறுகிய காலத்தில் நடந்த
நெடும் பயணம் நம் காதல்

விதைகளை வீசிவிட்டு
விதி வழி செல்வதெங்கே?

1 comment:

  1. இனிய கவிஞரே,

    உமது கல்லூரிக்கால நினைவின் பகிர்வுகள்தான் இந்த கவிதையோ?

    உமது கற்பனை நயம் அருமை.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...