Friday, October 5, 2012

                      நிலையாமை             



பெட்டி நிறைய பணம் அடுக்கி அழகு பார்த்தாலும்
சந்தன கட்டையை அடுக்கி வேகவைத்தாலும்
போன உயிர் போன உயிர் தான் உணரவில்லிங்க

என்னனவோ கண்டுபுடிசிங்க குலோநிங்னு பெயர் வச்சிங்க
எழவு விழாம இருக்க என்ன செஞ்சிங்க

முட்டாளுன்னு  அறிவாளின்னு பிரிச்சுப்பார்த்திங்க
சாவுல  ஒண்ணுதான்னு உணரவில்லைங்க

ஒழச்சு ஒட்டிய வயிறு உழைக்காம உப்பிய வயிறு
உயிர் போகையில எல்லாம் ஒண்ணுங்க

மேக்கப்போட்டு மினுமினுன்னு மேனிவைச்சாலும்
உயிர் போகையில நாறுமின்னு உணரவில்லிங்க

இருக்கும் வரைக்கும் ஆகாயத்துல பறந்துபார்தாலும்
மரணம் வந்தா மண்ணுலதான் மக்கிப்போகணுங்க

வாழுரவரை கூட வாழுறவனுக்கு நல்லது செஞ்சுட்டு
மரணம் வந்தா நல்ல கதி அடையவேனுங்க .  

1 comment:

  1. அன்புள்ள கவிஞரே,

    ஏன் உங்களின் ஐம்பதாவது கவிதையை எடுத்துவிட்டீர்கள்?
    நிலையாமையை உணர்துவதற்காகவா?

    நாம் வாழும் வரை
    நம்முடன் வாழ்பவர்களுக்கு
    நன்மைகள் பல செய்தால்
    நாமும் நல்ல கதி அடையலாம் என்று
    மிகவும் அருமையாக சொல்லியுளீர்கள்.

    மிகவும் அருமையான அழகான கைதியை தந்த கவிஞருக்கு நன்றி!

    அன்புடன்
    செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14


    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...