Friday, October 12, 2012

       காற்றில் பறந்த கவிதை



மழையின் போது விரியாத குடை மழை நின்றதும் விரிந்ததைப்போல்

ஜன்னல் ஓரம் அமர்ந்திட நினைக்கையில் ஊர் வந்து சேர்ந்ததைப்போல்

நடை சாத்திய பின் கடவுளை தரிசிக்க சென்ற பக்தனைப்போல்

பணம் வந்தும் பத்தியம் இருக்கவேண்டிய நோயாளியைப்போல்

வேலை தேடிச் சென்ற கம்பெனி காணமல் போனதைப்போல் 

காதுக்கம்மல் வாங்க போனபோது கழுத்து சங்கிலி களவாடப்பட்டது போல்

தாகம் எடுக்கையில் தேங்கி கிடக்கும் நீர்  கானல் நீரானதைப்போல்

பிடிக்க நினைக்கையில் பறந்து போன ஒரு  பட்டாம்  பூச்சியைப்போல்

காதலைச்  சொன்னபோது  கல்யாணப் பத்திரிக்கையை   நீட்டியவள்

காற்றில் பறந்தது எனக்கான கவிதை 

2 comments:

  1. சிந்தனைச் செல்வரே,

    இது கவிதையே அல்ல,
    உப்பு விற்க செல்கையில் மழை வந்ததை போல,
    பொரி விற்க செல்கையில் காற்று வீசுதல் போல,
    கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு சென்றால் அங்கு இரண்டு கொடுமைகள் டிங்கு டிங்கு என்று ஆடுதாம் என்று பெரியோர் சொல்லக் கேட்டதுண்டு.
    உமது உள்ளக் கிடக்கையை கவிதை வாயிலாக சொல்லுவதில் உமக்கு நிகர் நீரே!

    நீவிர் வாழ்க வளமுடன்.

    அன்புடன்,
    செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14

    ReplyDelete
  2. அன்புள்ள கவிஞரே,

    நம் தமிழ் நாட்டிற்கு மற்றுமோர் உவமை கவிஞர் கிடைத்து விட்டார்.

    கவிஞர் சுரதாவிற்கு அடுத்த படியாக...

    அவர் திருவாளர். முல்லைராஜன் அவர்களே தான்.

    சிறந்ததோர் உவமைக் கவிதை இது.

    அன்புடன்
    செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...