Thursday, September 27, 2012

வாருங்கள் கவிஞர்களே 





கார்கூந்தல் ,நெற்றி கேசம்
வில்லெனபுருவம்
மீன் விழி ,ஓரப்பார்வை
உதட்டுச்சுவை
சங்கு கழுத்து
மேகம் தழுவும் சேலை என ...
பிடி இடை
பாதச்சுவடு
புகழ்ந்தது போதும் கவிஞர்களே
வாருங்கள் கொஞ்சம்
வறுமையின் பக்கம்
பிளாஸ்டிக் பாட்டில் பொருக்குபவன்
எடைக்கு பேப்பர் வாங்குபவன்
சில்லறை வர்த்தகத்தில்
அந்நிய முதலீடு அறியாத
அரை கிலோ நெல்லிக்காய் ,ஐந்து எலுமிச்சை
நான்கு கீரைக்கட்டு விற்கும் பாட்டியின்
100 ரூபாய் முதலீட்டில் என்ன லாபம் ?
கொஞ்சம் வேடிக்கையான பட்டாசு
அதிகம் வினையான பட்டாசு
சாயப்பட்டறையில் சாயம் போன வாழ்க்கை
எந்திரத்தோடு எந்திரமாய் மாறிப்போன தொழிலாளர்கள்
உச்சிவேளை வந்தால் மட்டுமே
வேலை நேரம் முடியும் உழவர்கள்
பட்டினி பொறுக்காத குழந்தையின் அழுகை இவைகளைப்பற்றி
கொஞ்சமாவது நாமும் கவலை கொள்வோம் கவிஞர்களே .

1 comment:

  1. இனிய கவிஞரே,

    உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். என்ற கவிஞரின் வரிகள் பொய்யாகும் காலமிது.

    தான் உழைக்காமல் உழைப்பவர்களை சுரண்டி அவர்களின் வயிற்றில் அடித்து பிழைப்பவர்களின் காலமிது.

    உழைத்து உழைத்து உணவுப் பொருட்களை உருவாக்குபவனை விட அதை விற்றுத்தருகிறேன் என்று தரகு பேசுபவனே அதிகம் பொருளீட்டும் பொல்லாத காலமிது.

    உழைப்பவனுக்கு மண்சட்டியில் அரைக்கஞ்சி, ஆனால் அதனை மொத்தமாக கால் விலைக்கு வாங்கி நான்கு மடங்கு வியாபாரம் பேசி விற்போர்கள் மட்டும் வளமுடன் வாழும் வஞ்சகர்களின் காலமிது.

    காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்றான் கவிஞன். காலமிதை தவறவிட்டவன் உண்மையான உழைப்பாளிதான் என்பதை கவிஞன் உணர்ந்துக்கொள்ளும் காலமும் இதுதான்.

    நன்றியுடன்,

    செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...