ஒரு மகனின் ஏக்கம்
தாயே எனக்கு நீ
தாய்ப்பால் கொடுத்ததில்லை
தாலாட்டு பாடியதில்லை
உன் மடியில் உறங்கியதில்லை
என் பிஞ்சு விரல் உன் சேலை பற்றியதில்லை
தலை கோதிவிட்டதில்லை
தமிழ் சொல்லி தந்ததில்லை
அறு சுவை உணவை ஊட்டியதில்லை
அம்மா என்று அழுததோடு சரி
அம்மா என்று அழைத்ததில்லை
எப்படி முடியும்
என்னைப் புறந்தள்ள
இறந்தவள் அல்லவா நீ
இனிய கவிஞரே,
ReplyDeleteஅரசுத் தொட்டில் குழந்தையின் நிலையும் இதுதான்.
குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளின் நிலையும் இதுதான்.
ஆண்டவன் படைப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகளோ?
மனக்கலக்கத்துடன்
செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி - 14.