Wednesday, November 11, 2020

தனிமை

 





அந்த ஒற்றையடிப்பாதையில்எத்தனையோ வளைவுகள்அத்தனையும் காயங்கள்

சுமையாகுமோ என அஞ்சிவழித்துணையை நாடியதில்லை நான்

எத்தனையோ வருடங்களைகடந்த பின்னும்என்னுள் சிறு துளியாய்தங்கியுள்ளது என் தனிமை

மேகங்களின் நிழல்கள் எனசில நேரங்களில் சோகங்களில்யகரைந்து போயிருக்கிறேன்

வெயில் நாட்களில்மழை வேண்டியும் மழை நாட்களில் வெயில் வேண்டியும் நான் நின்றதில்லைகடவுள் கொடுத்ததை

மகிழ்ச்சியோ துன்பமோ அப்படியே அள்ளிக்கொண்டிருகிறேன்

எத்தனையோசுகங்களுக்குபின்னும் என்னுள் ஒளிந்துகொண்டிருக்கிறது சோகமயமான தனியாய் பயணித்த  அந்த ஒற்றையடிப்பாதை.                        

அப்பா

 அப்பா







விரல் பிடித்து நடக்கும் பருவத்திலும்தோளிலே சுகமாய் சுமப்பவர் அப்பா

நிஜ ஹீரோக்கள் எப்பொழுதும்ஆரவாரமில்லாத அப்பாவாகத்தானிருப்பார் 

இந்தியாவின் இரு முகம் போல்வறுமையில் அவரையும்வசதியில் உன்னையும்வைத்திருப்பார்

தன்னிலும் மேம்பட்டவனாய்உருவாக்க தன்னையே மறப்பார்

ஒரு சௌகர்யமான ஆசிரியர்அல்லது ஒரு நூலகம்ஒவ்வொருவரின் அப்பாவாகத்தான் இருக்க முடியும்

சில நேரங்களில் கடிந்து கொள்வதும்பல நேரங்களில் வருந்தி தவிப்பதும் அவரே

இருவேறு கருத்துக்கள்நிலவும் போதுநீ வளர்ந்து விட்டதாய் பெருமிதம் கொள்வார்

ஒருவனின் அத்தனை வெற்றிக்குப் பின்னும் ஒளிந்திருக்கும் ஒற்றை தியாகம் அப்பா

Wednesday, November 4, 2020

மீண்டும் நினைக்கையில்



நான் ரசித்த பாடல் வரிகளை மீண்டும் கேட்கையில் அவை யாரோ யாருக்காகவோ எழுதப்பட்டதை உணர்கிறேன்

காதல் கடிதங்களின்தூவிய பொய்களில் சிக்கிய மனதை எண்ணி துயருருகிறேன்

பழகிய இடங்கள் கண்ணில்படுகையில் பாலையில் நடக்கும் துயரடைகிறேன்

மொத்த உண்மையையும் சொன்னதினால் அவை வாக்குமூலமாக அமைந்த என் முட்டாள்தனம் உணர்கிறேன்

எல்லா அதிகாரத்தையும் உன்னை பெருமைப்படுத்த உனக்களித்த பின் தான் உணர்கிறேன் வரம் கொடுத்த சாமியின் சங்கடம்

வெறுமையை இட்டு நிரப்பமுட்செடியை தேர்ந்தெடுத்த முட்டாளாய் ஆனதன் பின்னனி எண்ணி மனம் வெறுக்கிறேன்

காத்திருந்தது வீழ்த்தும் கயமை காதலுக்கும் உண்டா 

காதல் தந்திரமானது

விலங்குகள் செய்யாதது 

ஒன்றை வீழ்த்தி ஒன்றை உண்ணும் 

மனித இனத்தின் நீட்சியாய் அமைந்தது

             

Wednesday, October 7, 2020

கடைசியாய்...


இன்னும் கொஞ்சநாள் மிச்சமிருக்கும் காதலையும் உன்னிடமே கொடுத்து விடுகிறேன்

அதற்கு முன் சில.... மகிழ்ந்த தருணங்கள் என்ற மிகப்பெரிய நினைவூட்டலை நான் உனக்குத்தரப்போவதில்லை.. 

பிரிவது என்றானபின் சொற்களின் விரயம் தவிர்க்க விரும்புகிறேன்

உன்னிடம் மட்டும் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஒரு துரோகியைப் போல் தருணத்திற்காக காத்திருந்து பழி தீர்த்தது மிகுந்த வலியைத் தருகிறது

நான் கொடுத்த அத்தனை ஆயுதத்தையும் என் மீதே எறிந்துவிட்டாய்

அதைக் கூட சகித்துக்கொள்வேன் அந்த ஏளன சிரிப்பை எப்படி சகிப்பேன்

மனிதர்கள் மீதான நம்பிக்கை இழப்பிற்கு நீயா உதாரணம்... 

வேண்டாம் அடுத்த தலைமுறை உன்னைப் பார்த்தால் காதல் கொள்ள அஞ்சும்....

Saturday, March 21, 2020

தனித்திரு

                   

 
அணு ஆயுதம் தயாரித்த நாடுகள் எல்லாம்
பாதுகாப்புக்கு முகக் கவசங்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டன

உலகமயமாதல் தாராளமயமாதல் பட்டியலில் கொரோனோ சேருமென யாரும் யோசிக்க கூட இல்லை

கண்ணுக்கு தெரியாத எதிரியோடு எப்படி போராடுவது எத்தனை நாள் போராடுவது என்ற குழப்பத்தில் தவிக்கிறான் மனிதன்

விலங்கு, ஊர்வன, பறப்பன என  விரட்டி விரட்டி வேட்டையாடிய மனிதனை  விரட்டுகிறது இவற்றில் ஏதோ  ஒன்று

நாளை கேள்ளிக்குறி என்றான போதும் பதுக்கல்காரனின் தன்னம்பிக்கை வியக்கவைக்கிறது

எங்கு காணினும் அச்சம்
எவர் முகத்திலும் பீதி
எந்த பொருளிலும் வைரஸ் காற்றில் விஷம் கனவிலும் கானாத கொடுமை

"சைவம்தான்" என்று சொன்னவன் ஒரு வேளை சரியாகத் தான் சொல்லியிருப்பானோ

விரல் ரேகை பதிவில் அத்தனையும் சாத்தியமா வியந்து முடிக்கையில் கொரோனாவும் அங்கேதான் வியப்பேது இன்றைய சரி நாளைய தவறு இதுதான் விதி

மனிதன் தவறும் போது கடவுள் தண்டிப்பது கதைகளில் மட்டுமே

என்னை தேடி நீ வரவேண்டாம் என்கிறான் இறைவன்

உன்னைக் காக்க
உன்  உள்ளத்தில் இல்லத்தில் இருக்கிறேன் என்கிறான் இறைவன்...

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...