இன்னும் கொஞ்சநாள் மிச்சமிருக்கும் காதலையும் உன்னிடமே கொடுத்து விடுகிறேன்
அதற்கு முன் சில.... மகிழ்ந்த தருணங்கள் என்ற மிகப்பெரிய நினைவூட்டலை நான் உனக்குத்தரப்போவதில்லை..
பிரிவது என்றானபின் சொற்களின் விரயம் தவிர்க்க விரும்புகிறேன்
உன்னிடம் மட்டும் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஒரு துரோகியைப் போல் தருணத்திற்காக காத்திருந்து பழி தீர்த்தது மிகுந்த வலியைத் தருகிறது
நான் கொடுத்த அத்தனை ஆயுதத்தையும் என் மீதே எறிந்துவிட்டாய்
அதைக் கூட சகித்துக்கொள்வேன் அந்த ஏளன சிரிப்பை எப்படி சகிப்பேன்
மனிதர்கள் மீதான நம்பிக்கை இழப்பிற்கு நீயா உதாரணம்...
வேண்டாம் அடுத்த தலைமுறை உன்னைப் பார்த்தால் காதல் கொள்ள அஞ்சும்....
No comments:
Post a Comment