அந்த ஒற்றையடிப்பாதையில்எத்தனையோ வளைவுகள்அத்தனையும் காயங்கள்
சுமையாகுமோ என அஞ்சிவழித்துணையை நாடியதில்லை நான்
எத்தனையோ வருடங்களைகடந்த பின்னும்என்னுள் சிறு துளியாய்தங்கியுள்ளது என் தனிமை
மேகங்களின் நிழல்கள் எனசில நேரங்களில் சோகங்களில்யகரைந்து போயிருக்கிறேன்
வெயில் நாட்களில்மழை வேண்டியும் மழை நாட்களில் வெயில் வேண்டியும் நான் நின்றதில்லைகடவுள் கொடுத்ததை
மகிழ்ச்சியோ துன்பமோ அப்படியே அள்ளிக்கொண்டிருகிறேன்
எத்தனையோசுகங்களுக்குபின்னும் என்னுள் ஒளிந்துகொண்டிருக்கிறது சோகமயமான தனியாய் பயணித்த அந்த ஒற்றையடிப்பாதை.
No comments:
Post a Comment