நான் இருக்கும் இடமெல்லாம்
நீ வந்தது
எதையாவது என்னிடமிருந்து கேட்டுப்பெற்றது
அவை என் நினைவின் சேகரிப்பு என நான் அறியாதது
ஆட்டோகிராபின் கடைசி பக்கத்தில் நீ எழுதியது
எடுத்துப்பார்க்க ஏதுவானது என நான் அறியாதது
நான் கோபமாய் பேசியது
நீ மௌனமாய் அழுதது
கடைசியாய் நான் உன்னை வழியனுப்பியது அப்போது நீ என்னை வாழ்த்தியது
எல்லாமே முற்றுப் பெறாத ஓவியமாய் முடிந்து போனது
சொற்களை வாரி இரைக்கும் இவளை நினைக்கையில்
உன் மௌனம் நினைவில் வந்து போகும்
வாழ்வில் எப்போதாவது சந்தித்தால் கேட்கலாம் என்றிருக்கிறேன்
இது போல நீயும் நினைத்ததுண்டா
என்னைப் போல் அல்லாமல் வாழ்வோடு நீயாவது பொருந்திப்போனாயா?
No comments:
Post a Comment