Saturday, June 10, 2017

                   உன்னோடு 
உன்னோடு
பேசிவிடுவதென
முடிவெடுத்து
அலை பேசியை எடுக்கிறேன்
எப்படி முடியும்
பேசக் கூடாதென
உனது அலைபேசி எண்ணை நீக்கியது
நான் தானே

யாரிடமாவது கேட்டுப்
பெறலாமா யோசிக்கிறேன்

நான் பேசிக்கொண்டே இருப்பதும்
நீ மௌனமாய் கேட்டுக் கொண்டே இருப்பதும்
நினைவில் வந்து போகிறது

முரண்பாடில்லா உறவு
சாத்தியமற்றது என்பதை
உணர்கிறேன்

நம்பிரிவுக்கான
புள்ளியை உற்றுநோக்குகிறேன்
அது முற்றிலும் கறைந்து விட்டிருக்கிறது

நம் இருவரும் மாறி மாறி கிழித்துக்கொண்ட
முகத்திரை இன்னும் அப்படியே இருக்கின்றது.

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...