Wednesday, February 1, 2017

                      சொல்லாத சொல் 

ஆகாய நீலத்தில்
அழகழகாய் , விதவிதமாய்
நீ உடையணிகையில்
எப்படி உணர்ந்தாயோ
எனக்குப் பிடிக்குமென

ஓவியன் கூட
தடுமாறிப்போவான் உன்னழகில்
வண்ணங்கள் தேடி
எண்ணங்களில் குழம்பி

எனைப்பேசு எனைப்பேசு என
சொற்கள் வரிசைக்கட்டி நிற்கையில்
பல நேரங்களில் சொற்கள்
தவிர்த்து புன்னகையையே
பதிலாய் தருவாய்

அந்தக் கண்களில் மட்டும்
பார்வையையும் , மொழியையும்
எப்படித்தான் ஒருங்கேத்  தருவாயோ

பூமிக்கும் வலிக்குமோ என
அதிராமல் நடக்கும் அழகைப் போல்
மென்மையோ உந்தன் மனசு

உன்னைப்படைக்க மட்டுமே பிரம்மன்
கால அளவை
நீட்டிக்கொண்டானோ

யோசித்து யோசித்து
திக்கித் திணறி
சொல்ல நினைத்ததை மறைத்து
எதையோ உளறி வெளியேறிய பின்பும்
என்னுள் தங்கிப் போனது
அந்த அழகு முகம் . 

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...