Wednesday, February 1, 2017

                                              தீரா  வினாக்கள்


உன் மீதான வெறுப்பின் ஆரம்பம்
எது என தொடங்கையில்
உன்னை வெறுத்துவிட்டேன்
என்பாயோ ?

தீர்வுக்காக பேசத்தொடங்கி
தீராப்பிரச்சனையில்
சிக்கிக்கொள்வேனோ ?

குழந்தை என கொண்டாடலாம் எனில்
குழந்தையா நீ கொண்டாடுவதற்கு
என்ற வினா ?

சுவாரசியப்  பேச்சோடு நிறுத்திக்கொள்வோம்
என தொடங்கையில்
எப்படியோ புகுந்து விடுமோ
பழைய கசப்பான நிகழ்வும் ?

பேசுவதை தவிர்க்கலாம் எனில்
மொத்தமாய் முடிந்துவிடுமோ
என்ற அச்சமோ ?

தள்ளி இருந்தால் எதுவும் அழகோ
சூரியன், நிலா , கடல் போல் ?
  

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...