Wednesday, January 21, 2015

          தொடரும் 


நான் சொல்ல முற்படுகையில்

நீ முகத்தை திருப்பிகொள்வதும்
நீ சொல்ல எத்தனிக்கையில்
உன்னைப் போலவே நானும் நடந்து கொள்வதும்
பழைய அன்பையெல்லாம்
புரட்டிப்பார்த்து புதிய நடைமுறையை
மாற்ற நினைக்கையில்
நீ இயல்பாய் இருப்பதாய்
"உன் கற்பனைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது "
என நழுவி நகர்வதும்
மூன்றாம் நபரின் உதவியை நாட
முயல்கையில்
"நமக்குள் என்ன நடந்துவிட்டது ?
நடுவர் எதற்கு?
"என சண்டை நீளுமோ
என்ற அச்சத்தில்
பழைய அன்பு தொடராதா?
என்ற ஏக்கத்தில்
எதுவும் நிரந்தரமல்ல
அந்த அன்பு
இந்த கோபம்
அந்த நாட்கள்
இந்த வாழ்வு
எல்லாம் மாறும் 
என சமன் செய்துகொண்டு
உன்னோடு தொடர்கிறேன்
என்  உறவை .






2 comments:

  1. அன்புள்ள கவிஞரே,
    சிறுவயது பள்ளிக்கூட நாட்களையும் நண்பர்களையும்
    அவர்களுடன் போட்ட சிறு சிறு விளையாட்டு சண்டைகளையும்
    ஞாபகப் படுத்தி விட்டீர்கள். அந்த நாள் ஞாபகத்தை நெஞ்சினில் நினைக்க வைத்த கவிஞருக்கு நன்றிகள் பல.

    அன்புடன்
    செந்தில்குமார்

    ReplyDelete
  2. இதை எழுதியபோது என்ன மன நிலையில், யாருக்கு எழுதினீர்களோ அறியேன். ஆனால், இப்பொழுது இதைப் படிக்கும்போது அதன் தொனி, கருத்து, ஏன், பால் கூட மாறி விட்டதாக உணர்கிறேன். எப்போதும் நம் நட்பு தொடரும்.
    அன்புடன்,
    ஜார்ஜ்

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...