இறைவன்
நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பதில்லை
நமக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கிறான்-இறைவன்
கண்டுபிடிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு
கடவுளின் விளையாட்டு
வெற்றியில் நாம் சொந்தம் கொண்டாடிவிட்டு
தோல்வியில் அவனைத் தேடுவதில் நியாயமில்லை
மனிதனின் பிறப்பின் இரகசியம் ,இறப்பின் இரகசியம்
அறிவியல் அறியாது இறைவன் அறிவான்
சிலருக்கு மாறி ,மாறி இன்பமும் துன்பமும்
சிலருக்கோ ஒரு பாதி இன்பம்,மறு பாதி துன்பம்
இன்பமும் துன்பமும் அனைவருக்கும் சரிபாதி
இன்பத்தில் சிரிப்பு ,துன்பத்தில் அழுகை
சிரிப்பையும் ,அழுகையையும் தந்தவன் அவனே
இன்பம் நாம் செய்த புண்ணியம்
துன்பம் நாம் செய்த பாவம்
சொர்க்கமும் ,நரகமும் நம் மனம் தான்-அதில்
இறைவனை நினைத்திருந்தால் நிம்மதிதான்.
நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பதில்லை
நமக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கிறான்-இறைவன்
கண்டுபிடிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு
கடவுளின் விளையாட்டு
வெற்றியில் நாம் சொந்தம் கொண்டாடிவிட்டு
தோல்வியில் அவனைத் தேடுவதில் நியாயமில்லை
மனிதனின் பிறப்பின் இரகசியம் ,இறப்பின் இரகசியம்
அறிவியல் அறியாது இறைவன் அறிவான்
சிலருக்கு மாறி ,மாறி இன்பமும் துன்பமும்
சிலருக்கோ ஒரு பாதி இன்பம்,மறு பாதி துன்பம்
இன்பமும் துன்பமும் அனைவருக்கும் சரிபாதி
இன்பத்தில் சிரிப்பு ,துன்பத்தில் அழுகை
சிரிப்பையும் ,அழுகையையும் தந்தவன் அவனே
இன்பம் நாம் செய்த புண்ணியம்
துன்பம் நாம் செய்த பாவம்
சொர்க்கமும் ,நரகமும் நம் மனம் தான்-அதில்
இறைவனை நினைத்திருந்தால் நிம்மதிதான்.
அன்புள்ள கவிஞரே,
ReplyDeleteஇன்பம், துன்பம் அனைத்தும் நம் எண்ணங்களின் எழுச்சிகளே. நம் மனம்தான் அனைத்தையும் சமமாக பாவித்து சமநிலைப்படுத்த வேண்டும். சமநிலை என்ற ஒன்று இருந்தால் நாம் தேவையற்ற வருத்தமோ அதீதமான மகிழ்ச்சியோ கொள்ளத் தேவையில்லை. இன்பம், துன்பம் அனைத்தையும் சமமாக கருதுதலே இறைநிலை ஆகும் . அந்நாளைய சாதுக்கள், முனிவர்கள், துறவிகள் போன்றோரை துன்பம் வாட்டியதில்லை. அவர்கள் இன்பத்திலும் மூழ்கி திளைத்ததில்லை. அவர்கள் அனைத்தையும் சமமாக பாவிக்க கற்றுக்கொண்டவர்கள். நாமும் அனைத்தையும் சமமாக பாவிக்க கற்றுக்கொண்டால் இறைநிலையை எய்த முடியும். பற்றற்ற நிலையை அடைய நமக்கு ஒரு வேலைக்காரியின் மனநிலை தேவை.
ஒரு சிறிய உதாரணம்.............
ஒரு வேலைக்காரி தன எஜமானனின் குழந்தையை கொஞ்சுகிறாள். தூக்கி வைத்துக்கொண்டு அக்குழந்தையே தன உலகம் என்கிறாள். அக்குழந்தைக்கு ஒன்று என்றால் மிகவும் பதறி விடுகிறாள். ஆனால் அவளுக்கு அது தன் குழந்தை இல்லை என்பது நன்றாக தெரியும். அதனால் அவள் தனது வீடு சென்றதும் அந்த எஜமானனின் குழந்தையை பற்றி சிறிதும் அக்கறை ஏற்படுவதில்லை.
அதுபோல நாமும் தாமரை இலை தண்ணீர் போல உலகில் பற்றற்று இருக்க கற்றுக்கொண்டால் நிம்மதி பெறலாம். பேரானந்தம் அடையலாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்பது வள்ளுவர் வாக்கு.
அதாவது ஒருவன் எவ்வெப் பொருட்களை விட்டு நீங்குகிறானோ அப்பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
நன்றி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.....
இறைவனைப் பற்றிய உங்களுடய கவிதை மிக நன்று
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்