கடிதம்
காதலி ,மனைவியானால்
கடிதங்கள் உயிர் பெறுமே
அந்த சுகம்
இந்த அலைபேசி உலகில்
ஒரு நாவலாகவோ அல்லது
ஒரு கவிதையாகவோ
உயிர் பெறும்
மூளையை கசக்கிப் பிழிந்து
உணர்வுகளை கொட்டித்தீர்ப்பது
கடிதத்தில்
தேர்வுக்கட்டணம் ,project work என
தெரிந்தே எழுதப்படும் பொய்
மகனின் கடிதம்
புகுந்த வீட்டின் பெருமை பேசி
பிறந்த வீட்டின் அருமையை
மறைமுகமாக வெளிப்படுத்துவது
மகளின் கடிதம்
காதல் கடிதங்களும் ,தேர்வு முடிவுகளும்
கட்டுக்களைப் பிரிக்கையிலேயே
தபால் அலுவலகத்திலேயே
மடக்கிப் பிடிக்கப்படும்
புத்தகங்களுகிடையே
புதைத்து வைக்கப்பட்டிருக்கும்
காதல் கடிதங்கள்
எத்தனை முறை படித்தாலும்
சலிக்காத கடிதங்கள்
என்னையும் கொஞ்சம் படித்தால் என்ன என
ஏங்கும் புத்தகங்கள்
முதல் நாள் அனுப்பிய காதல் கடிதம்
மூன்றாம் நாள் பதிலுக்காக
காத்திருக்கும் காலங்கள்
காதலி ,மனைவியானால்
கடிதங்கள் உயிர் பெறுமே
அந்த சுகம்
இந்த அலைபேசி உலகில்
இன்றைய தலைமுறைக்கு கிட்டுமா
என்பதே என் கவலை .
அன்புள்ள கவிஞரே,
ReplyDeleteஇது அவசர யுகம் என்று நமக்கு நாமே போட்டுக்கொண்ட பொய்வேலி.
தமிழ் பாட கட்டுரைகள் வாயிலாக கடிதங்கள் எழுத மாணவர்களுக்கு நம் அரசாங்கமும் கற்றுக்கொடுக்கிறது. எது எப்படியாயினும் கடிதங்கள் எழுதுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் முயற்சியின் மூலம் தான் சாத்தியமாகிறது. "என்னையும் கொஞ்சம் படித்தால் என்ன என ஏங்கும் புத்தகங்கள்" என்ற வரிகள் சிலிர்க்க வைக்கின்றன. கவிஞருக்கு கோடானுகோடி பாராட்டுக்கள்
வாழ்க வளமுடன் .
அன்புடன்
செந்தில்குமார்.