Thursday, March 6, 2014

                          குழந்தைகள் 


ஒரு குழந்தை  பிறக்கும் போது பூமியில்
ஒரு விண்மீன் முளைக்கிறது

ஒரு கோடி பூக்கள் ஈடாகுமா
ஒரு குழந்தையின் சிரிப்பிற்கு முன்னால்

எத்தனை மொழிகள் இருப்பினும்
ஏங்குவது என்னவோ குழந்தையின் மொழிக்கு

கணவன் -மனைவி சொல் மறைந்து
தந்தை -தாய் சொல் மலர்வது குழந்தையால்

இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை அல்ல
இனிதான் வாழ்க்கை என  உணர்த்துவது குழந்தை

எனினும்  என்னுள் எழும் கேள்விகள்
ஏன் இப்படியும் சில பெற்றோற்கள்

நாய்க்குட்டியை வீட்டில் வளர்த்தும்
பிள்ளையை விடுதியிலும் விடுகிறார்கள்

கல்வி முக்கியம் அதைவிட
குழந்தைகள் முக்கியம்  உணர்வதில்லை

இவர்கள் தாண்டாத உயரம்
பிள்ளைகள் தாண்ட ஏனோ நிர்பந்திக்கிறார்கள்

புத்தகங்கள் மட்டுமே அறிவு என
தவறான புரிதலில் தண்டிக்கிறார்கள்

சில அப்பாக்கள் ஏனோ
உயர் அதிகாரிகள் போல் உத்தரவிடுகிறார்கள்

குழந்தைகள் பாறைகள் அல்ல
உளி கொண்டு செதுக்குவதற்கு

அவர்கள் ஓவியங்கள்
தூரிகையால் வண்ணமிடுங்கள் .


      

4 comments:

  1. ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தையை தனது பிரதிநிதி என்றே எண்ணுகின்றனர். அவர்கள் மூலமாக தனது எண்ணங்கள், விருப்பங்களை நிறைவேற்றவே விழைகின்றனர். அதனால்தான் தான் தாண்டாத உயரத்தையும், தன்னை விடவும் தமது குழந்தை பல பரிமாணங்களிலும் பரிமளிக்க விரும்புகின்றனர். எங்கே தான் செய்த சிறு சிறு தவறுகளைப்போல் தன் குழந்தையும் செய்துவிடுமோ என அஞ்சி அக்குழந்தைக்கு நீங்கள் சொல்வதுபோல் உயரதிகாரிகள் போல் விளங்க முற்படுகின்றனர்.

    பெற்றோரின் தவறான புரிதல்களே அனைத்து தவறுகளுக்கும் காரணமாகின்றன.
    எதுவாயினும் குழந்தை ஒன்றே நம் அனைவரின் வாழ்விற்கும் அர்த்தத்தை கொடுக்கின்றது என்பதை உங்கள் கவிதையின் முன் பாதியில் மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள். அற்புதமான சிற்பம்தான் இந்த கவிதை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. I hope you may know the famous saying 'The child is the father of man'. Children make our lives meaningful. The Bible says,"Children are the gifts of God". As Senthil observes some parents wish to fulfill their unfulfilled dreams through their children and some other parents are not at all realizing the responsibilities of parents. Any way, your poem is impressive. Congrats. Keep on writing. George

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...