Sunday, March 2, 2014

           எனக்கு மட்டுமே தெரிந்த வலி 


மூளை முந்திய நிகழ்வுகளில்
மூழ்கிப் போகிறது

முட்களில் நடந்து நடந்து
பூக்களில் நடக்கையிலும் இரத்தம் கசிகிறது

நினைவு தப்பிய நாட்களிலும்
அவ்வப்போது வந்து போயின
அந்த கருப்பு நாட்கள்

வாழ்க்கையின் பயணத்தில்
நெடுந்தூரம் பயணித்த பின்னும்
 பழைய நிகழ்வுகளிலேயே நிற்கிறது என் மனம்

இப்படி நடந்திருந்தால்
இப்படி நடக்காதிருந்திருந்தால்
என்ற போராட்டம்
என்னுள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

வசந்த காலம்  வந்த பின்னும்
இவனுக்கு மட்டும் இலையுதிர் காலம்.



3 comments:

  1. கவிஞரே,
    ஆழமான காயத்தின் ஆறாத வடுக்கள் அவை.
    நம் எண்ணங்கள் எப்போதும் நாம் கஷ்டப்பட்ட காலத்தையே என்றும் நினைவூட்டுகின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கருத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
    சில சமயங்களில் பழையனவற்றை நாம் மறக்க நினைத்தாலும் அவை நம் நினைவை விட்டு அகல மறுக்கின்றன. இப்படி இருப்பதனால்தான் நாம் தற்போது காரில் சென்றாலும் நம் நினைவுகள் மிதிவண்டியிலோ அல்லது நடந்தோ செல்வதையே நாடுகின்றன. மனதை மாற்றவோ மறக்கவோ இயலவில்லை. கவிஞர் நீங்கள் கவிதையில் காலத்தை கழித்து விடுகிறீர்கள். புது புது கவிதைகள் புனைந்து மனதை இளமையாக்கி விடுகிறீர்கள் . நாங்கள் எங்கு செல்வோம்?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. I observe a certain amount of pessimistic outlook in your poem. Let the dead past bury its dead. Think about the present and future and act enthusiastically. Being a dad of two young cubs, you should have a positive approach and your entire life is for your beloved sons only. It is very easy to be sad but it is very very difficult to be happy. Why don't you try for the difficult one?

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...