தேடல்
என்னைத் தின்றது
எழுத்தில் பகிர்கிறேன்
என் நிலை உணர்க
உறவுகள் தேடி அலைந்தேன்
ஒட்டிக்கொள்ளும் அட்டை என்றது
உறவுகள் உதறி தள்ள
ஒதுங்கி நின்றேன்
பாசமில்லா பதர் என்றது
வசதியில் கொஞ்சம் நாள்
வாழ்ந்து பார்த்தேன்
பட்டினி கிடந்தவனுக்கு
பல்லக்கு தேவையா என்றது
உண்மையாய் இருந்தேன்
உரசிப்பார்த்து போலி என்றது
போலியாய் வாழ்ந்தேன்
உரசாமல் அசல் என்றது
பிறருக்கு உதவினேன்
விளம்பர யுக்தி
விளகிக்கொள் என்றது
கருமியாய் நானும்
காலம் கழித்தேன்
காலம் கழித்தேன்
விளம்பரம் வெளுத்தது என்றது
அனுபவம் பெற்று
அறிந்ததைச் சொன்னேன்
பொய் உரைக்கிறான்
போதும் என்றது
தேடலில் இருந்து பெறுவது
தெளிதல் என்றேன்
குழம்பிப் போனவன்
குழப்புகிறான் என்றது
மனிதனிடமிருந்து விலகிக்கொண்டேன்
இயற்கையோடு நேசம் கொண்டேன்
வாழ்க்கை இனிது
வாழும் ஆசை கொண்டேன்.
உன்னத படைப்பு பாராட்டுக்கள் நண்பா..........
ReplyDeleteபெரியார் சொல்கிறார்:
ReplyDeleteஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன்
ஞாபகப்படித்தியமைக்கு நன்றி - சக்தி