விடியல்
சூரியன் ஒளிந்துகொள்ளப்போகிறான்
மலைமுகட்டின் மங்கலான வெளிச்சத்தில்
கிளைபரப்பி நிற்கிறான்
இன்னும் சற்று நேரத்தில்இரவு தொடங்கிவிடும்
முன்பெல்லாம் நிலாவையும் நட்சத்திரங்களையும்
ரசித்த கண்கள் சலித்துப் போகின்றன
நொடிகள் நத்தை என நகர மணித்துளிகள்
யுகங்கலென காட்சியளிக்க
சகித்துக்கொள்ள இயலவில்லை
எத்தனை நேரம் தான்
உறக்கம் வராத முன்னிரவிலோ அல்லது
உறக்கம் கலைந்த பின்னிரவிலோ விழித்திருப்பது
கண்களில் அயர்ச்சி ,தனிமை
பயமுறுத்தும் இருள் தாங்கமுடிவதில்லை
அடுத்தநாள் விடியலைக்கான
ஆவலுடன் காத்திருக்கிறேன் .
பெரும்பாலும் கவிஞர்கள் இரவின் காதலர்களாக இருப்பார்கள்....
ReplyDeleteஆனால், நீங்கள் விடியலுக்குக் காத்துக்கிடந்திருப்பதை கண்டு நான் என்ன சொல்லட்டும் .....
என்னைப் பொருத்தவரை விடியல் அழகு தான் ... விடியல் மட்டும் தான் ....
miga nanru kavingarea
ReplyDeleteyethartham...
ReplyDeleteஇனிய கவிஞரே,
ReplyDeleteஇது சற்றே உமது கவிதைகளில் இருந்து வித்தியாசப்படுகிறது.
எனினும் இது மிகவும் அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
கே. செந்தில்குமார்