Saturday, November 17, 2012

       தேவதையின் வருகை                


கங்காரு தன் குட்டியை சுமப்பதைப்போல் 
உன் நினைவினுடனே பயணிக்கிறேன் 

மனதை அழுத்தும் உன் நினைவுகளை 
உள்ளம் அழுதும் உணர்த்தமுடிவதில்லை 

எப்படிச் சொல்வது என் ஆழ் மனதின் இம்சையை 
ஏனெனில் நான் ஒரு அகிம்சைவாதி அல்லவா 

அர்த்தத்துடன் பேசின உன் கண்கள் 
அர்த்தமற்று பேசின உன் வார்த்தைகள் 

நீ வார்த்தையில் சிக்கிகொண்ட போதும் 
நான் வாய்ப்பை நழுவவிட்டவன் 

தொடும் தூரத்தில் நீ இருந்தாய் 
நாகரிகம் நாள் பார்த்தது 

நாள் பார்த்து, நாள் பார்த்து,நாள் கடந்து போனது 
நீ எனக்கில்லை என்றானது 

தேவதைக்கு தூது விடத்தெரியவில்லை எனக்கு 
நீ சொன்னாய் 'சொல்லியிருந்தால் உன் வாசல் வந்திருப்பேன் '

கை நழுவிய பொருள் கண்களில் வந்து போக 
இமைகள் மூட மறுக்கும் 

மனம் மெல்ல மறக்கும் அதற்குள் 
மரணம் வந்து போகும் மீண்டும் மறு ஜென்மம் எடுக்கும் . 

1 comment:

  1. இனிய கவிஞரே,
    ஒரு கவிஞன் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை உங்களின் பல கவிதைகளின் மூலம் நாங்கள் நன்கு உணர்கிறோம். கவிஞருக்குள் இத்தனை சோகங்களா?
    கவிதையை படிக்கும் எங்களையே அதன் கதாப்பாத்திரங்களாக மாற்றி விடுகிறீரே? நீர் உண்மையில் ஒரு மந்திரவாதி தான்.

    அன்புடன்,
    கே. செந்தில்குமார், திருச்சி.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...