யாசகன் மனம் அறிக
![]() |
பசியாத நல்வயிறு
உலகிலில்லை
பசித்த பாழ் வயிறு
உலகில் உண்டு
ஒரு கோடி பணம்
ஆகாரமில்லாத தீவு
ஒரு கவளம் சோறு
உன் வயிறோ
பசித்த வயிறு
எது வேண்டும் உனக்கு
உணவா? பணமா?
அஃறினையாய் இருந்தவரை
உணவுக்கு பஞ்சமில்லை
உயர்திணை யானோம்
உணவுக்கு வழி இல்லை.
நடைபாதை மனிதர்க்கு
முகம் சுளிக்கும் மனிதர்களே
பூமி புரட்டிப் போட்டால்
நீயும் நானும் ஒரே ஜாதி
நினைவில் கொள்க.
யாசகன் மனம் அறிக என்று நீவிர்
ReplyDeleteவடித்த இந்த வைர வரிகள்
என்னை மீளாச் சிந்தனையில் ஆழ்த்தி உள்ளது.
"நடைபாதை மனிதர்க்கு
முகம் சுளிக்கும் மனிதர்களே
பூமி புரட்டிப் போட்டால்
நீயும் நானும் ஒரே ஜாதி
நினைவில் கொள்க"
இந்த வரிகள்
வாழ்வில் நாம் என்றும் கொள்ள வேண்டியது
கர்ம சிந்தனையை வளர்க்க இது ஒன்றே போதும்.
அன்புடன்
செந்தில் குமார்