இறைவன் வந்தான்
ஒரு நாள் இறைவன் வந்தான் ஆகா என மகிழ்ந்து போனேன் என்ன வேண்டும்? என்றேன் உண்மையாய் இரு உனக்கென்ன வேண்டும்? என்றான். பாரதியை போல் பத்து பதினைந்து தென்னை பத்தினிப்பெண் என்றேன் தந்தேன் என்றான் சென்றான் இன்னொரு நாள் வந்தான் மீண்டும் என்ன வேண்டும்? என்றான் தயங்கியபடி சொன்னேன் கொஞ்சம் காசு பணம், பதவி நிறைய கொடுத்துச் சென்றான் ஏதோ சிந்தனையில் இருந்தேன் என்ன ஆச்சரியம் அடடே என் இறைவன் ‘நலமா எனக்கேட்டான்’ அழுவதைப் போல் சொன்னேன் “என் பழைய வாழ்க்கை” இன்னும் சிறிதுநாள் சென்றால் இதுவும் உன் பழைய வாழ்க்கைதான் இன்றே இன்பமாய் இரு எனச்சொல்லிச் சிரித்து காற்றில் கரைந்து போனான் இதற்குப் பிறகு நானும் அவனைத் தேடவில்லை அவனும் என்னிடம் வரவில்லை. |
Good
ReplyDelete