பகலில் காண்பதெல்லாம் உடைதரித்த வேடம் இரவில் வருவதெல்லாம் நிர்வாண நிஜம் கனவுகள் தின்ன தின்ன நான் இளைக்கிறேன் வாழ்வில் நிகழ்ந்து விட்ட சோகமெல்லாம் துண்டு துண்டாய் ஊர்வலம் போகின்றன என் தூக்கத்தில் என்னைத் துளைத்தெடுத்த பெண்ணெல்லாம் ஊர்வலமாய்ப் போகின்றனர் என் கனவில் உதறி எழுகிறேன் என்றோ நிகழ்ந்ததெல்லாம் ஜீரணமின்றி தலைசுற்ற வெளித்தள்ளுகிறது கனவு லட்சியக் கனவு என்பதெல்லாம் பொய் கனவுகள் மட்டும் தான் மெய் இதயத்தின் மனசாட்சி கனவாய்ப் போய்க் குடியேறுகிறது என் கனவுகள் எப்பொழுதும் என்னைத் துரத்தும் நான் கண்மூடி மரணித்து விட்டால் என் துன்பத்திற்கு யார் காரணமோ அங்குப் போய் குடியேறும் அவன் தூக்கத்தைத் தொலைத்தாவது உயிர்வாழும் |
Tuesday, August 31, 2010
கனவுகள்
Thursday, August 5, 2010
இறைவன் வந்தான்
இறைவன் வந்தான்
ஒரு நாள் இறைவன் வந்தான் ஆகா என மகிழ்ந்து போனேன் என்ன வேண்டும்? என்றேன் உண்மையாய் இரு உனக்கென்ன வேண்டும்? என்றான். பாரதியை போல் பத்து பதினைந்து தென்னை பத்தினிப்பெண் என்றேன் தந்தேன் என்றான் சென்றான் இன்னொரு நாள் வந்தான் மீண்டும் என்ன வேண்டும்? என்றான் தயங்கியபடி சொன்னேன் கொஞ்சம் காசு பணம், பதவி நிறைய கொடுத்துச் சென்றான் ஏதோ சிந்தனையில் இருந்தேன் என்ன ஆச்சரியம் அடடே என் இறைவன் ‘நலமா எனக்கேட்டான்’ அழுவதைப் போல் சொன்னேன் “என் பழைய வாழ்க்கை” இன்னும் சிறிதுநாள் சென்றால் இதுவும் உன் பழைய வாழ்க்கைதான் இன்றே இன்பமாய் இரு எனச்சொல்லிச் சிரித்து காற்றில் கரைந்து போனான் இதற்குப் பிறகு நானும் அவனைத் தேடவில்லை அவனும் என்னிடம் வரவில்லை. |
வார்த்தை
தெறித்த வார்த்தையில் ஜனித்த வரலாறு ஏராளம். கூனியின் ஏளனம் இராமாயணம் பாஞ்சாலியின் ஏளனம் மகாபாரதம். இந்த‘வார்த்தை’ நாயகனாய் வலம் வந்ததை விட வில்லனாய் திரிந்தது தான் ஏராளம். சூடான வார்த்தைக்கு முன்னால் உடன்படிக்கைகள் ஊனமுற்ற குழந்தைகள் தொண்டைக்குள் சிக்குவதெல்லாம் அன்பின் வார்த்தைகள் கொட்டித் தீர்ப்பதெல்லாம் பிரிவின் அடையாளங்கள் காற்றில் கரைந்து போகும் இந்த வார்த்தைகள் தான் சில நேரங்களில் நெஞ்சு நின்று போகச் செய்து விடுகிறது. வார்த்தைகளின்றி உன் நெஞ்சும் என் நெஞ்சும் பேசிக் கொண்டால் உறவுகள் என்றுமே சுகம் தான். |
Subscribe to:
Posts (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
விலங்கு நடந்தால் காடு செழிக்கும் மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது ...
-
கவிதை குழந்தையின் கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது அழகான ஓவியம் அம்மாவின் அழகான கோலத்தில் மறைந்திருக்கிறது எரும்புத்தீ...