காதலுக்கு முன்பும் - பின்பும்
முன்பெல்லாம் விழிகள் விரியும் பார்வையால் வீழ்த்துவாய்
தற்பொழுது வெற்று பார்வை வினா வாக்கியத்தால் கொல்கிறாய்
முன்பெல்லாம் அலைபேசி அழைப்புக்காய் காத்திருந்த தருணங்களை வியப்பாய்
தற்போதெல்லாம் நான் அழைத்தாலும் எதிர்முனையில் ரிங்டோன் மட்டுமே பதிலாய்
எல்லா நாளும் இப்படி கழிந்தால் எப்படியிருக்கும் - அப்போதைய மொழி
நத்தையாய் நகர்கிறது இந்த ஜென்மம் எப்படி கழியும் என்பாய் நீ?
உன்னோடு நடக்கையில் எத்தனை சுகம் அப்போது சொன்ன மொழி
தற்போது ஐந்தடி இடைவெளியில் அறைந்து சாத்தப்படும் கதவு எதையோ உணர்த்துகிறது
ஒற்றை ரோஜாவில் அப்படி ஒரு சந்தோஷம் அப்போது
எனக்கென ஏதுமின்றி பூங்கொத்துடன் மண்டியிட்டு கேட்கிறேன்
நீ மௌனமொழி உதிர்க்கிறாய்
முன்பிருந்த காதல் மனம் சார்ந்தது
தற்பொழுது மூளையோடு தொடர்படுத்தப்பட்டதால்
அடிக்கடி தொடர்பு எல்லைக்கு அப்பால் நீ
எதுவும் மாற்றத்துக்கு உரியது- உன் எண்ணம்
என்றைக்கும் மாறாதவன் நான் - அங்குதான் முரண்பட்டேன்
பூமி ஒன்று , வானம் ஒன்று
வாழ்க்கை ஒரு முறை வாழ்வோம் இறுதிவரை
இப்பொழுதும் ஒற்றை ரோஜா அல்ல
ஒரு பூந்தோட்டத்துடன் காத்திருக்கிறேன்
சின்னதாய் ஒரு புன்னகை பூத்திடு .

No comments:
Post a Comment