கனவுகளின் நாயகன்
கடலையும்,நிலத்தையும் ஒருங்கே கண்டு வளர்ந்து
வானத்தையும் அளந்து பார்த்தவர்
அணுகுண்டு தயாரிப்பினூடே அடிமனதில்
ஆழமாய் வேரூன்றிப்போன மனிதாபிமானம்
அறிவுத் தேடலும்,ஆன்மீகத்தேடலும்
ஒருங்கே பெற்றதால் வானம் வசப்பட்டது
செல்லுமிடமெல்லாம் ஆசிரியரின் பெருமை சொன்னவர்
சொன்னதில்லை ஒரு நாளும் அவரின் பெருமை
அழகான ஜனாதிபதி மாளிகை
அலங்கரிக்கப்பட்டது அவரால்
மாணவர்கள் அறிவைத் தேடிச்செல்வது இயல்பு
மாணவர்களிடம் அறிவே தேடிச்சென்றது வியப்பு
மதநல்லினக்கத்துடன் வளர்த்த
தந்தையும் தாயும் கிடைக்கப்பெற்ற வரம் அவருக்கு
இந்தியர்களின் மதநல்லினக்கம் இப்படி என
உலகுக்கு உணர்த்த எங்களுக்குக் கிடைத்த வரம் அவர் .
அருமையான இரங்கற்பா கவிஞரே |--
ReplyDelete