எப்படி சொல்வேன்
இரவினில் கொஞ்சம் அழுகிறேன்
சபைகளில் தன்நிலை மறக்கிறேன்
சங்கீதம் கூட கேட்பதை தவிர்க்கிறேன்
காதுக்குள் உன் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
கண்களை மூடி உன் முகம் பார்க்கமுடிகிறது
என் சுவாசத்தில் ஏதோ தடுமாற்றம்
இதயம் இடப்புறமா ,வலப்புறமா குழப்பம்
கடந்த கால நினைவுகள் நிகழ்கால நிகழ்வுகளை அழித்துப் போகிறது
காதலை வெளிப்படுத்தாத நான் ஊமையானால் என்ன
காற்றலையை உதவிக்கு அழைக்கிறேன் அது
செல்லுமிடமெல்லாம் சொல்லிவிட்டு சென்றால் என்னாவது
காத்திருந்தே கரைகின்றன
எனது பொழுதுகள் .