தனிமை
அந்த ஒற்றையடிப்பாதையில்
எத்தனையோ வளைவுகள்
அத்தனையும் காயங்கள்
நத்தை தன் கூடு சுமப்பது போல்
சுமக்க வேண்டி வருமோ என அஞ்சி
வழித்துணையை நாடியதில்லை நான்
எத்தனையோ வருடங்களை
கடந்த பின்னும்
என்னுள் சிறு துளியாய்
தங்கியுள்ளது என் தனிமை
மேகங்களின் நிழல்கள் என
சில நேரங்களில்
சோகங்களில்
கரைந்து போயிருக்கிறேன்
வெயில் நாட்களில்
மழை வேண்டியும்
மழை நாட்களில் வெயில்
வேண்டியும்
நான் நின்றதில்லை
கடவுள் கொடுத்ததை
மகிழ்ச்சியோ துன்பமோ
அப்படியே
அள்ளிக்கொண்டிருகிறேன்
எத்தனையோ
சுகங்களுக்குபின்னும்
என்னுள்
ஒளிந்துகொண்டிருக்கிறது
சோகமயமான
அந்த ஒற்றையடிப்பாதை .
நண்பரே வணக்கம்.
ReplyDeleteநானும் தனிமையை அனுபவித்துள்ளேன்.
உங்கள் கவிதை மூலம் அதன் வலியும் வலிமையும் புரிகிறது.
அது சில சமயங்களில் சுகமானதாகவும் பிற சமயங்களில் சோகமானதகவும் உள்ளது.
அதை புரிந்து கொண்ட எனக்கு உங்களின் கவிதை ஒரு வடிகால்.
நன்றிகள் பல.
நட்புடன்
--
Ezhilnagar Senthilkumar
Loneliness is inevitable in life. But how we take it is really important. It is really appreciable that you have got the temperament that whatever comes in life you accept it without murmuring.
ReplyDeletegeorge