தன்னை வியத்தல்
கண்ணாடியை
கொத்திச் செல்லும்
குருவிகள்
உணர்ந்ததில்லை
தன் அழகை
எறும்புகள்
என்றும்
உணர்ந்ததில்லை
தன்
அழகான
அணிவகுப்பை
பூக்களின்
நிறமும், மணமும்
அழகை
யார் சொல்லி
பூக்களிடம்
புரிய வைப்பது
சுற்றும் பூமி
சற்றே நின்று போனால்
என்னவாகும் என்பைதை
பூமி அறிந்ததில்லை
உன்
அக
அழகை
கனவுகளும்
புற
அழகை
கண்ணாடியும்
காட்டும் போது
தன்னையே வியந்துகொள்
எப்படி சொல்வது என்று தெரியவில்லை கவிஞரே!
ReplyDeleteஎறும்புகள் பற்றி நீவிர் அறிந்து செதுக்கி இருக்கும் இந்த வைர வரிகள்
மிகவும் அருமை.
வாழ்க நீ பல்லாண்டு.
அன்புடன்
செந்தில் குமார்