பள்ளிப்பருவத்தின் வாட்சு தெரிய முதல் வரிசையில் நான் நின்ற புகைப்படம் பலமுறை ரசித்தபடம் தோழியர் முகம் பார்க்க பத்தாம் வகுப்பில் எடுக்கப்பட்ட நுழைவுத் தேர்வு புகைப்படம்-நான் அவனில்லை பிரியப் போகிறோம் என்று கூறி மூன்று நண்பர்களும் ஒன்றாய் எடுத்தப்படம் ஒன்றாய் ஊர் சுற்றுகிறோம் வேலையின்றி கல்லூரிக் காலத்தில் நானும் காதலியும் எடுத்தபடம் என் மீது நம்பிக்கையின்றி வாங்கிச் சென்றபடம் கடன் தொல்லையுடன் கவலை ரேகை என் முகத்தில் தெரிய எடுத்த கல்யாண புகைப்படம். எல்லாவற்றையும் விட தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து அமர்ந்த மாதிரி சேர்த்து அமைக்கப்பட்ட படம் தெய்வமாய் காக்கிறது என் மழலைக் காலம் முதல் |
Tuesday, September 7, 2010
பழைய புகைப்படம்
மனிதர்கள்
கட்டித் தழுவும் போதும்
கை குலுக்கும் போதும்
நெகிழ்ந்து போகும்
என் மனசு
அப்போதெல்லாம்
ஆள் அரவமில்லாத
பச்சைப் புல்வெளியில்
இஷ்டம் போல்
புரள்வதாய்
நினைத்துக்கொள்ளும்
என் மனசு
சிரித்து நலம் விசாரிக்கும்
மளிகைக் கடைக்காரர்
சின்னதாய் புன்னகைக்கும்
எதிர்வீட்டுக்காரர்
இன்னும் பூமியில்
எல்லாரும் எல்லாமும்
பிடிக்கும்
நிழல் அடர்ந்தமரம்
மாலை நேரத்து வெயில்
அதிகாலை குளிர்
பேருந்தின் முன்வரிசை
இன்னும் என்னென்னவோ
பிடிக்கும்
கட்டித் தழுவியவனும்
கைகுலுக்கியனும்
நான் தடுக்கிவிழும்போது
சிரிக்கும் போது
அத்தனையும் பொசுங்கிப்போகும்
என் மனசும்தான்.
Subscribe to:
Posts (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
விலங்கு நடந்தால் காடு செழிக்கும் மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது ...
-
கவிதை குழந்தையின் கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது அழகான ஓவியம் அம்மாவின் அழகான கோலத்தில் மறைந்திருக்கிறது எரும்புத்தீ...