மனம்
உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே
பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம்
இருட்டில் இருந்துற வெளிச்சம் பார்த்த மனமே வெளிச்சத்திலும் இருண்டு போகுமே
நட்பு ,உறவில் உரசிப்பார்த்து உரசிப்பார்த்து நித்தம் ஒரு சரி தவறு என மாறி மாறி குழம்பி நிற்பதும் மனம்
விரும்பிய காரணம் சொல்லும் அதே மனம் வெறுக்கும் பட்டியல் வெளியிட அட அந்த மனமா இந்த மனம்
கள்வன் கயவன் நல்லவன் நாணயஸ்தன் எல்லோரையும் தான் நல்லவன் என நம்பவைக்கும் இந்த மனம்
எல்லோருக்குள்ளும் கொஞ்சம் அன்பு கொஞ்சம் நஞ்சு உள்ளே உலவும் இந்த மனம் மனித விசித்திரம்
இப்போதெல்லெம் எல்லோரிடமும் இருப்பது மனம் மட்டுமே மனசாட்சி என்பதெல்லாம் பழங்கதையாய் போனதே.....
-பூ.முல்லைராஜன்
கவிஞர் பெருமகனாருக்கு வணக்கம்...
ReplyDeleteதங்களின் இந்த கவிதையை படிக்கும் போது மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய மாபெரும் ஆயுதம் என்று எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வருகிறது...
மனதை பக்குவப்படுத்தும் மாயக்கலையை இன்று வரை முறைப்படி கற்றுக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்...
அருமையான மற்றும் சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் அமைந்த கவிதை வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் கவிஞரே...