மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள் இனி எனக்கென்ன கவலை தற்காலிக விடுதலை இனி இல்லை இல்லாள் தொல்லை ஏன்? எப்படி? எதற்கு? போன்ற தொலைத்தெடுக்கும் தொல்லை கேள்விகள் இல்லை நித்தம் ஓர் உணவு விடுதி வகை வகையான உணவு இஷ்டம் போல் எழலாம் எட்டு மணிக்கு கோயில் சாமி கொடுமையும் இல்லை கட்டுகள் அவிழ்க்கப்பட்ட காளையாய்த் திரியலாம் நினைத்த போது சினிமா சத்தமாய் பாட்டு வீடே அதிரும் படி எம்பிக் குதிக்கலாம் ஆனாலும் அளவு தெரியாமல் குறைத்துச் சாப்பிட்டதால் அதிகாலைப் பசியில் உருளும் போது உள் மனசுக்கு மட்டும் தெரியும் அவள் இல்லா வெறுமையும் வலியும். |
Wednesday, July 21, 2010
மனைவி
Subscribe to:
Post Comments (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
விலங்கு நடந்தால் காடு செழிக்கும் மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது ...
-
கவிதை குழந்தையின் கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது அழகான ஓவியம் அம்மாவின் அழகான கோலத்தில் மறைந்திருக்கிறது எரும்புத்தீ...
Hi Mullai ........
ReplyDeleteHow are you ?
Kavithai Superb
Plz. update more kavithai
Best Regards
A. Arulraja
உங்கள் கவிதை என்னை மிகவும் நெகிழவைத்தது.
ReplyDeleteநிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்.
என்பதுகேற்ப
உங்களது கவிதை உள்ளது.
உங்கள் கவிதை பயணம் தொடர எனது மனமார்ந்த
வாழ்த்துகள்.
உங்களது கவிதை வாசகன்
பிரகாஷ்.ப
Congratulations!
ReplyDeletedear mullai sir,
Your kavithai is very nice.
"Manaivi" kavithai is very interesting.
it is time dependent.
All the best.
regards,
senthilkumar
trichy-14
Nice Poem sir
ReplyDelete