
என் ஊரின் தோழர்களே தயவுசெய்து என் எதிர் வராதீர் வந்தால் என்னிடம் ஏதும் தகவல் சொல்லாதீர் வகுப்பறை விட்டு ஓடி வாய்க்காலும் நதியுமாய் நான் திரிந்த கதை ஏராளம் இன்னும் என்னென்னவோ என் நெஞ்சில் வடுவாய் வேண்டாம் தோழர்களே என் எதிர் வராதீர் என் வீடு முற்றம், தோட்டம் நான் அமரும் நிலைவாசல் ஊர்ப் பெரிசுகள் வந்து கதைபேசும் திண்ணை என நான் வாழ்ந்த கதை சொல்லும் என் ஊர்த் தோழர்களே உங்களுக்காகச் சொல்கிறேன் என் மனதில் ஓடுவதெல்லாம் வீட்டை விற்று வீழ்ந்த கதையும் பஞ்சமாய் பாண்டவர்கள் போல் திரிந்த கதை மட்டுமே எனவே தோழர்களே என் எதிர் வராதீர். |