அலைகள்
(காதலனைக் கைப்பிடிக்க முடியாத ஒரு இந்தியப் பெண்ணின் ஏக்கத்தின் வெளிப்பாடு )
(காதலனைக் கைப்பிடிக்க முடியாத ஒரு இந்தியப் பெண்ணின் ஏக்கத்தின் வெளிப்பாடு )
நேற்று வரை வந்த கடிதங்களை தணலில் இட்டாச்சு
நாளை முதல் வேறு முகம் நான் அணியும் நாள் வந்தாச்சு
கடற்கரை வசனங்கள் கடற்காற்றில் கரைந்துபோனது
கால் தடங்களை கடல் அலைகள் அழித்துப்போனது
சேர்த்து வச்ச ஆசையெல்லாம் செல்லாக்காசு
சேர்ந்துவாழ நினச்சதெல்லாம் செல்லரிச்சுபோச்சு
ஆட்டோகிராப்பின் பக்கத்தை அடையாளம் தெரியாம மாத்திட்டன்
ஆறுதல் சொல்லிகிட்டேன் அடிமனசில் உள்ளத அப்படியே வச்சிருக்கேன்
சில பெண்களுக்கு இரண்டு வாழ்க்கை
தான் நினச்சது ஒன்னு அப்பன் விதிச்சதொன்னு
அப்படி இப்படின்னு யோசிச்சு பார்த்ததில
அகலிகையாய் வாழனும், இல்ல அவன் நினைவோட சாகனும்