விவசாயி
(வாடிய பயிரைக் கண்டு தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிக்கான கவிதை )
தமிழா ஊருக்கெல்லாம் உணவிட்டவன் நீ
தண்ணீர் இல்லா பயிரைக்கண்டு உயிர் விட்டவனும் நீயே
பாலம் பாலமாய் வெடித்துக் கிடந்த நிலம் பார்க்கையில்
பாழும் மனம் தாங்காமல் உயிரை மாய்த்தவன்
தலை குனியும் நெற்கதிருக்காக
தலை குனியா தன்மானம் கொண்டவன்
பூச்சியைக் கொல்ல வைத்திருந்த மருந்தில்
பூஜ்ஜியமாய் போனது உன் வாழ்க்கை
காசு பணம் சேர்த்து வைக்காம
கடன சேர்த்து வச்சவன்
காவிரியை நம்பின நீ
கார் மேகத்த நம்பலையே
சற்றே சிந்தியுங்கள் சகோதரர்களே
சமூக அமைப்பில் எங்கோ கோளாறு
பணம் பணமாய் பதுக்கி வைத்தவன் -உன்
பாதம் தொடும் நாள் தொலைவில் இல்லை
மாறும் இவ்வுலகில் எல்லாம் மாறும் -நல்ல
மாற்றம் உனக்கானது என்றாகும்
உன்னை நம்பு ,இந்த மண்ணை நம்பு ,
உழைப்பை நம்பு ,
உலகம் உனது என்வார்த்தை நம்பு .