கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது
அழகான ஓவியம்
அம்மாவின் அழகான
கோலத்தில்
மறைந்திருக்கிறது
எரும்புத்தீனி
காதலியின் கண்களில்
கண்டுகொள்ள இயலாத
கள்ளத்தனம்
அலங்கரிக்கப்போவது எந்த
அழகியின் கூந்தல் எனகு
கவலைகொள்ளும்
ஒற்றைரோஜா
மலையைத் தழுவும் மேகம்
பெண்ணின் அழகை
மூடச்சொன்ன ரகசியம்
கடவுளுக்கு காணிக்கை
ஊமை ஒப்பந்தங்கள்
தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்
தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்
இவற்றில் சிக்கித்தவிக்கிறது
எனக்கான கவிதை .
எனக்கான கவிதை .