உன்னோடு
நேற்று நடந்தது போலநினைவில் வாட்டுது
தேக்கு மரமென நீ இருக்க
சந்தன மரமென நான் மணக்க
உன் ஒற்றை பார்வையிலநான் பொத்துன்னு விழுந்தேன்
சந்தைக்கு வந்ததாய்
சாக்கு போக்கு சொல்லி
சந்திக்க வந்த ஒன்னசந்திக்க நான் மறுக்க
விருட்டுன்னு நீ நடக்க
வேதனையில் நான் அழுகநாம
கல்யாணம் செய்த பின்னே
நான் மட்டும்
பொறந்த வீடு போகயில
சிறுக்கி எவளாவது விரித்த வலையில்
நான் மட்டும்
பொறந்த வீடு போகயில
சிறுக்கி எவளாவது விரித்த வலையில்
சிக்குவியோன்னு நான்
சீக்கிரமாய் வந்தகதைசொல்லி சொல்லி
சிரித்தோமே
நண்டும் சிண்டுமாய்
நாலுபுள்ளபிறக்கையில
மண்ணுல தொலச்ச காச
மண்ணுல தேடுறது விவசாயம்னு
திசைக்கொன்னா படிக்க வச்ச
திடீர்னு நீட்டி படுத்த நீ
மீண்டும் எழலையே
சாவுல உன் சாவுநல்ல சாவு
மண்ணு தாங்கினாலும்
மகன் தாங்கலையே
இந்த உசுர கையில புடிச்சு
என்ன செய்ய போறேன்உன்கூடவே வாரேன்.